உலகம்

அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி

அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந்தேதி நடக்கிறது. அதில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். ராஜபக்சே கட்சியின் வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

இலங்கை அரசியல் சட்டப்படி, அந்நாட்டு குடிமகன் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். கோத்தபய, தேர்தலில் போட்டியிட தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டு இருந்தது.

இந்த மனுக்களை பரிசீலித்த இலங்கை கோர்ட், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதையடுத்து, இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயே ராஜபக்சே போட்டியிடுவதில் இருந்த சிக்கல் நீங்கியது.

Comment here