ஆன்மீகம்

அத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்?

40-ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 28ம் தேதி அதிகாலை அத்திவரதர் திருக்குளத்திலிருந்து வெளியே எடுக்கும் பணி 12.30க்கு தொடங்கப்பட்டது. அதிகாலை 2.30 மணியளவில் அத்தி வரதர் திருக்குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார். 

அப்போது அத்திவரதன் திருமேனியில் படிந்து இருந்த பச்சையம் அனைவருக்கும் தரப்பட்டது. வரதன் திருமேனியில் இருந்த காரணத்தால் துர்நாற்றம் எதும் இன்றி மிகுந்த வாசனையுடன் இருந்ததது.

ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையில் இருந்து அத்தி வரதன் எழுந்தருளி உள்ளார். அவருடன் 16 நாக சிலைகள் அத்தி வரதருடன் இருந்தன. வேத மந்திரங்கள் முழங்க அத்தி வரதரை குளத்திலிருந்து வசந்த மண்டபத்தில் கொண்டு செல்லப்பட்டார்.

அத்தி வரதரை முழு ஆய்வுக்கு பின்னர் திருமேனி பொதுமக்கள் தரிசனத்திற்கு ஜூலை 1.07.19 முதல் 48 நாட்கள் காலை முதல் மாலை 5மணி வரை அனுதினமும் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தி வரதரை தரிசிக்க 10 லட்சம் கிட்டத்தட்ட பக்தர்கள் வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனம் செய்ய ஒரு பொது வழியும், ஒரு சிறப்பு தரிசன வழியும் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவ்வழியாக செல்லும் ரயிகள் காஞ்சிபுரத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் என்றும், கோயிலை சுற்றி பல இடங்களில் கழிப்பறைகள், பாதுகாப்புக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment here