தொழில்நுட்பம்

அறிமுகமாகிறது ‘Mi CC9, Mi CC9e’ ஸ்மார்ட்போன்கள்

அறிமுகமாகிறது 'Mi CC9, Mi CC9e' ஸ்மார்ட்போன்கள்

சியோமி நிறுவனம், இளைஞர்களை மையப்படுத்தி தயாரித்துள்ள ‘Mi CC9 மற்றும் Mi CC9e’ ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சீனாவில் ஒரு நிகழ்வின் மூலமாக இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது சியோமி நிறுவனம்.

சியோமியின் இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பல அதிகாரப்பூர்வமான செய்திகளும் வந்தன, பல அதிகாரமற்ற தகவல்களும் கசிந்தன. ‘Mi CC9, Mi CC9e’ ஸ்மார்ட்போன்களுடன் Mi CC9 மெய்டுவின் ஒரு சிறப்புப் பதிப்பு ஸ்மார்ட்போன்,  3 பின்புற கேமராக்கள், 48 மெகாபிக்சல் பின்புற கேமரா, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, நீல நிறத்தில் அட்டகாசமான பார்வையுடன் Mi CC9 ஸ்மார்ட்போன், போன்ற பல தகவல்கள்.

அதை தாண்டி நீங்கள் இந்த ஸ்மார்ட்போன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், இந்த ஸ்மார்ட்போன் எந்த விலையில் அறிமுகமாகலாம், இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு எங்கு நடைபெருகிறது, எப்போது துவங்குகிறது, முழு தகவல்கள் உள்ளே!

‘Mi CC9, Mi CC9e’ ஸ்மார்ட்போன்கள்: அறிமுக நிகழ்வு!

சீனாவில் நடைபெறவுள்ள இந்த ‘Mi CC9 மற்றும் Mi CC9e’ ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வு ஆசிய மத்திய நிலையான நேரப்படி மாலை 7 மணிக்கு துவங்கவுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4:30 மணி. இந்த நிகழ்ச்சியின் நேரலை, சியோமி நிறுவனத்தின் வெய்போ கணக்கு மற்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான தளத்தில் ஓளிபரப்பாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் நேரலையை அங்கு காணலாம்.

Mi CC9 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலை!

இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட Mi CC9 ஸ்மார்ட்போனின் விலை 2,599 யுவான்கள் (26,200 ரூபாய்). 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு அளவு கொண்ட மற்ற இரு வகைகளும் 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 3,099 யுவான்கள் (31,300 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mi CC9e ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலை!

Mi CC9 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் மற்றொரு ஸ்மார்ட்போனான Mi CC9e-யும் மூன்று வகைகளிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு,  6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும்  8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என்ற இந்த மூன்று வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,899  யுவான்கள் (19,200 ரூபாய்) மற்றும் 2,199 யுவான்கள் (22,200 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mi CC9 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!

Mi CC9 ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன், ஸ்னெப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. 16 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டிருக்கும். இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டை-C சார்ஜிங் போர்டுடன் 3,940mAh பேட்டரி, 27W சார்ஜர் பொன்றவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என அவர் தகவல் வெளியிட்டிருந்தார். 

Mi CC9e ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!

Mi CC9e ஸ்மார்ட்போன் 6.08-இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன், ஸ்னெப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 3,940mAh பேட்டரி, 18W சார்ஜர் பொன்றவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என அவர் தகவல் வெளியிட்டிருந்தார். Mi CC9 போலவே இந்த ஸ்மார்ட்போனும் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டை-C சார்ஜிங் போர்டுடன் வெளியாகலாம்.

Comment here