அழகு குறிப்புகள்

அழகா நகம் வளர்க்கணும்னு ஆசையா?

sendhamarainews.com

பொதுவாக நகம் வளர்ப்பது ஒரு சிலருக்கு பிடித்தமான ஒரு விஷயம். குறிப்பாக பெண்களுக்கு நீளமாக நகம் வளர்த்து அதில் விதவிதமாக நெயில்பாலிஷ் போட்டு அழகு பார்ப்பது அவர்களின் பொழுதுபோக்காக இருக்கக்கூடும்.

ஆனால் நகம் வளர்ப்பது அனைவருக்கும் எளிதான ஒரு காரியம் அல்ல. சிலருக்கு அடிக்கடி நகம் உடைந்துவிடுவதால் அதனை நிர்வகிப்பது சற்று கடினமான செயலாக இருக்கும்.

நகங்கள் நீளமாக வளரும் வரை காத்திருந்து திடீரென்று அவை ஏதோ ஒரு காரணத்தால் உடைய நேரிடும்போது அதனை அழகு படுத்த நீங்கள் செய்த கற்பனை எல்லாம் அம்பேல். நகம் உடைவது, நகத்தில் விரிசல் உண்டாவது ஆகியவை அனைத்தும் அவற்றின் பராமரிப்பு குறைபாட்டால் உண்டாகும் தொந்தரவாகும். இந்த பதிவில் சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மேற்கொள்வதால், நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர்கின்றன. மேலும் இவை உடையும் வாய்ப்பும் குறைகிறது. முயற்சித்து பார்த்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை

மிக விரைவில் நல்ல தீர்வு கிடைக்க இந்த முறையை பின்பற்றலாம். இது ஒரு சிறந்த தீர்வாகும். எலுமிச்சையில் உள்ள வைடமின் சி மற்றும் அன்டி ஆக்சிடென்ட் ஆகியவை நகங்கள் உடையாமல் இருக்க உதவுகின்றன. எலுமிச்சை நகத்தை வலிமையாக வைத்து நீளமாக வளர உதவுகிறது.

செய்முறை 1

1. அரை கப் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும்.

2. தண்ணீரை லேசாக சூடாக்கி, அதில் எலுமிச்சை சாற்றை கலக்கவும்.

3. இந்த எலுமிச்சை கலந்த நீரில் உங்கள் விரல் நகங்களை 10-15 நிமிடங்கள் ஊற விடுங்கள்.

செய்முறை 2

எலுமிச்சையை நறுக்கிவிட்டு, அதனை உங்கள் விரல் நகத்தில் சில நிமிடங்கள் தொடர்ந்து தேய்க்கவும். எலுமிச்சை சாறு உங்கள் நகம் முழுவதும் படர்ந்து காய்ந்து விடும்.

எத்தனை முறை இதனை செய்யலாம்?

ஒரு வாரத்தில் மூன்று முறை இப்படி செய்வதால் உங்கள் நகம் வலிமையாவதை உங்களால் உணர முடியும்.

Comment here