சினிமா

ஆசியாவை சேர்ந்த கவர்ச்சி பெண்கள் பட்டியலில் அனுஷ்கா!

ஆசியாவை சேர்ந்த கவர்ச்சி பெண்கள் பட்டியலில் அனுஷ்கா!

லண்டனை சேர்ந்த ஈகிள்ஸ் ஐ என்ற அமைப்பு: இந்த வருட கவர்ச்சி பெண்கள் பட்டியலில் முதல் இடத்தை இந்தி நடிகை அலியாபட் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் அனுஷ்காவுக்கு 22-வது இடம் கிடைத்துள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தகவலை வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். அனுஷ்கா 2006-ல் ரெண்டு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்து மேலும் புகழ் உச்சிக்கு சென்றார். தற்போது மாதவனுடன் நிசப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Comment here