இந்தியா

இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் உலக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருக்க வேண்டும் – பிரதமர் நரேந்திரமோடி

இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் உலக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருக்க வேண்டும் - பிரதமர் நரேந்திரமோடி

கடந்த 5 ஆண்டுகளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதற்கான முயற்சிகளுக்கு இந்தியா மிகப்பெரும் முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது. நவீன தொழில்நுட்பங்களை வளர்க்க இந்தியா அதிகமாக செலவிடுகிறது.

அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், பிரதமரின் ஆராய்ச்சி உதவி நிதி, தொடங்குக இந்தியா திட்டம் போன்றவை 21-ம் நூற்றாண்டின் இந்தியாவுக்கான அடிப்படைத் திட்டங்களாகும். புதிய கண்டுபிடிப்பு என்பதை ஒரு கலாசாரமாக இந்தியா மேம்படுத்தி வருகிறது.

எந்திர வழிக்கற்றல், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை 6-ம் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு கற்றுத்தர நாம் இப்போது முயற்சி செய்கிறோம். பள்ளியில் இருந்து உயர்கல்வி வரை ‘ஆய்வு’ என்பது புதிய கண்டுபிடிப்புக்கான சூழலாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தியா எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வுகளைக் கண்டறிவதற்கு மாணவர்கள் முன்வரவேண்டும். அதுபோன்ற தீர்வுகளை உலகத்திற்கு குறிப்பாக, பல நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு வழங்க இந்தியா விரும்புகிறது.

வாழ்க்கையை எளிதாக்குவதற்காகவும், ஒட்டுமொத்த உலகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் புதிய கண்டுபிடிப்புகளையும், அதற்கான முயற்சிகளையும் நாம் ஊக்கப்படுத்தி வருகிறோம்.

Comment here