கிரிக்கெட்விளையாட்டு

இந்தியா ‘திரில்’ வெற்றி – தொடரையும் கைப்பற்றியது

இந்தியா ‘திரில்’ வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

இந்திய அணி 48.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 316 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. ஜடேஜா 39 ரன்களுடனும் (31 பந்து, 4 பவுண்டரி), ஷர்துல் தாகூர் 17 ரன்னுடனும் (6 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். கோலி ஆட்டநாயகனாகவும், ரோகித் சர்மா தொடர்நாயகனாகவும் (3 ஆட்டத்தில் 258 ரன்) அறிவிக்கப்பட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற 10-வது தொடர் இதுவாகும்.

Comment here