உலகம்

இம்ரான்கான் 2 நாட்களில் பதவி விலக வேண்டும் – போராட்டக்காரர்கள்

இம்ரான்கான் 2 நாட்களில் பதவி விலக வேண்டும் - போராட்டக்காரர்கள்

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமரான பின்னர் அவரது தலைமையிலான ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் தவறான அரசுமுறை நிர்வாகம் ஆகியவற்றால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகி வருவதாகவும் பாராளுமன்ற தேர்தலில் மோசடி செய்து இம்ரான் கானின் கட்சி ஆட்சியை கைப்பற்றி விட்டதாகவும் அந்நாட்டின் பிரபல மதத்தைலைவரான ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் பஸ்ல் இயக்கத்தின் தலைவரான மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

பாகிஸ்தானை இம்ரான் கான் ஆட்சியின் பிடியில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி சிந்து மாகாணத்தின் தெற்கு பகுதியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி மாபெரும் பேரணி ஒன்றை மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் தொடங்கினார்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சியைச்சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய ரெஹ்மான், “இம்ரான் கான் ஆட்சியை விட்டு விலக வேண்டும். நாங்கள் அவருக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் இம்ரான் கான் பதவி விலகாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்போம்” என்றார்.

Comment here