கல்வி

இஸ்ரோவில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை…

திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவரும் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தில் (ISRO Liquid Propulsion System Centre) காலியாக உள்ள மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

மெக்கானிக்கல் பிரிவில் 04 பணியிடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 03 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ்  மற்றும் மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ படித்து முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயதானது 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.ipsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:02.07.2019

Comment here