சினிமா

எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி

எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி

எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளனர். இவர் ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

படத்துக்கான திரைக்கதையை விஜயேந்திரபிரசாத் எழுதுகிறார். பாகுபலி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதி இருந்தார். விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் ரூ.20 கோடி சம்பளம் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் இயக்குனர் பிரியதர்ஷினியும் த அயன் லேடி என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.

Comment here