கிரிக்கெட்விளையாட்டு

கடைசி 20 ஓவர் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

கடைசி 20 ஓவர் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் இலங்கையை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் குசல் பெரேரா 57 ரன்கள் (45 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் (8.5 ஓவர்) திரட்டி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். வார்னர் 12 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார். பிஞ்ச் 37 ரன்களில் (25 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஸ்டீவன் சுமித் 13 ரன்னிலும், மெக்டெர்மோட் 5 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

ஆஸ்திரேலியா 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 57 ரன்களுடனும் (50 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஆஷ்டன் டர்னர் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது.

Comment here