இந்தியா

குடியுரிமை திருத்த சட்டத்தை எந்த மாநிலமும் நிராகரிக்க முடியாது – எடியூரப்பா

குடியுரிமை திருத்த சட்டத்தை எந்த மாநிலமும் நிராகரிக்க முடியாது - எடியூரப்பா

மத்திய அரசு இயற்றியுள்ள இந்த சட்டத்தை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றும் நமது நாட்டில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எந்த மாநிலமும் நிராகரிக்க முடியாது.

நமது நாட்டின் உண்மையான குடிமக்களுக்கு எள் அளவு கூட பாதிப்பு இல்லை. அதனால் இந்த சட்டத்தில் யாரும் பயப்பட தேைவ இல்லை. முஸ்லிம் ஓட்டுகள் சென்றுவிடுமோ என்ற பயத்தில் காங்கிரஸ் கட்சியினர் முஸ்லிம் மக்களை திசை திருப்புகிறார்கள். இனி காங்கிரசாரின் நாடகம் எடுபடாது.

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகிேயாரது ஆட்சி காலத்திலும் குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டது. அப்போது எந்த பிரச்சினையும் உண்டாகவில்லை. இப்போது பிரதமர் மோடி ஆட்சியில் மட்டும் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்?.

காங்கிரஸ் கட்சியின் தவறான பிரசாரத்தை தடுக்கவே, முஸ்லிம் மக்களுக்கு தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது.

Comment here