ஆன்மீகம்

குரு பகவான் விரதம் – விரத முறைகள்

நவகிரகங்களில் முழு சுப கிரகமாக விளங்குபவர் குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு உண்டான அனைத்து ஏற்றங்கள், நன்மைகளையும், செல்வங்களையும் வாரி வழங்கக் கூடியவர் என்பதால் குரு பகவானுக்கு தனிச் சிறப்பு உண்டு.

ஜோதிட சாஸ்திரப்படி, சில துன்பங்களை தரக்கூடிய கிரகங்களை குரு பகவனானின் பார்வை பாட்டால், அவரின் துன்பங்கள் விலகி நன்மை பெருகும். நற்பலன்கள் அதிகரிக்கும். 

வியாழன் கிரகத்திலிருந்து வெளிப்படும் மஞ்சள் நிறக் கதிர், சூரிய கதிரோடு கலப்பதால் பூமியில் உயிரினங்கள் தோன்றுகின்றன.

ஜனன காலத்தில் ஜாதகத்தில் குரு பலம் பெற்றவர்கள் உடல் ஆரோக்கியம், மன அமைதி, ஆன்மிகச் சிந்தனை, மந்திர சாஸ்திரம், தெய்வ தரிசனம், ஆன்மிக குருக்களின் சந்திப்பு, தெய்வ பக்தி, நல்ல புத்திர், சமூகத்தில் நன்மதிப்பு, அனைத்து வகை செல்வங்கள் கிடைக்கும். 

குருவின் நட்சத்திரங்களான புனர் பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் நட்பு உண்டாகும். மஞ்சள் நிற ஆடை அணிவதில் விருப்பம் ஏற்படும்.

சிலருக்கு ஜனனகாலத்தில் குருவின் பார்வை குறைவாக இருந்தால், பிள்ளைகளால் அவப் பெயர், ஆன்மிக நாட்டக் குறைவு, ஆரோக்கியமின்மை, பொருளாதார வளர்ச்சி குறைவு உள்ளிட்ட குறைவுகள் ஏற்படும்.

இது போன்ற குறைப்பாடுகளை குறைத்து, நற்பலங்களை கூட்ட குரு விரதம்இருப்பது சிறந்த உபாயம். விரதம் இருந்து குருவின் ஸ்தலமான ஆலங்குடி சென்று வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர் சென்று முருகனை விரதம் இருந்து வழிபடலாம். 
வசதி இல்லாதவர்கள் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் செய்யலாம். யானைக்கு கரும்பை உணவாக கொடுக்கலாம்.

வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலில் குருபகவானை சென்று வழிபடலாம். கொண்டைக்கடலையால் ஆன மாலையை சாற்றி வழிபடுவது நல்லது. 

விழாயக்கிழமைகளில் விரதம் இருந்து சித்தர்களின் ஜீவ சமாதி சென்று வழிபடலாம். வியாழக்கிழமை கொண்டைக்கடலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

Comment here