தமிழ்நாடு

குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்கும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும் – வெங்கையா நாயுடு

குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்கும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும் - வெங்கையா நாயுடு

தேசிய கடல்வள தொழில்நுட்ப கழகம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன் வெள்ளிவிழா கொண்டாட்டம் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்வள தொழில்நுட்ப வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் சென்னைக்கான கடலோர வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு அமைப்பு தொடர்பான புத்தகத்தை வெங்கையா நாயுடு வெளியிட்டார். இதேபோல தேசிய கடல்வள தொழில்நுட்ப கழகத்தின் வெள்ளி விழாவினையொட்டி நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி, வெள்ளி விழா கொண்டாட்டத்தை நினைவு கூரும் வகையிலான சிறப்பு தபால் உறையையும் அவர் வெளியிட்டார்.

விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-
இந்தியாவுக்கும் கடலுக்கும் உள்ள உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சோழர்களின் பூம்புகார் துறைமுகம் இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்புகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Comment here