இந்தியா

சந்திரயான்-2 வெற்றிகரமான திட்டம் – பிரதமர் மோடி பேச்சு

சந்திரயான்-2 வெற்றிகரமான திட்டம் - பிரதமர் மோடி பேச்சு

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும், விஞ்ஞான பாரதி அமைப்பும் இணைந்து நடத்தும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது.

நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-2 திட்டத்துக்காக நமது விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்தார்கள். அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றாலும் திட்டம் வெற்றி பெற்றது. நீங்கள் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்தியாவின் அறிவியல் சாதனைகளின் பட்டியலில் இது பெரிய உயரத்தை அடைந்திருப்பதை காணமுடியும்.

அறிவியல் ஆராய்ச்சிகள் நூடுல்ஸ் தயாரிப்பது போலவோ, உடனடி பீட்சா வாங்குவது போலவோ இல்லை. அதற்கு மிகவும் பொறுமை அவசியம். இதுபோன்ற ஆராய்ச்சிகளின் பலன் மக்களுக்கு ஒரு நீண்டகால தீர்வை அளிப்பதாக இருக்கும்.

இந்த திட்டம் இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அறிவியலில் தோல்வி என்பது இல்லை. இதில் முயற்சிகள், பரிசோதனைகள் மற்றும் வெற்றிகள் அடக்கம்.

Comment here