அறுசுவை

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் ஜாமூன் செய்வது எப்படி ?

sendhamarainews.com

தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 2

பிரட் தூள் – ½ கப்

மைதா – 3 மேசைக்கரண்டி

சர்க்கரை – ¾ கப்

தண்ணீர் – 1 ½ கப்

ஏலக்காய்த் தூள் – 1 மேசைக்கரண்டி

எண்ணெய் பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:

சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, கைகளால் நன்கு மசித்துக் கொள்ளவும். இதனுடன் பிரட் தூள் மற்றும் மைதா சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய்த் தூள்  சேர்த்து சர்க்கரைப் பாகு தயார் செய்யவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டிய ஜாமூன்களை மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இந்த ஜாமூன்களை சூடான சர்கரைப் பாகில் போட்டு ஊறியதும் சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறவும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு பிடிக்காத குழந்தைகளும் இந்த ஜாமூனை விரும்பி சாப்பிடுவார்கள்!

Comment here