உலகம்

சிரியாவில் சண்டை நிறுத்தம்

சிரியாவில் சண்டை நிறுத்தம்

குர்து படையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் படி எங்களது கட்டுப்பாட்டு பகுதியான ரஸ் அல்-அய்ன் நகரில் இருந்து வீரர்கள் வெளியேறினர். அந்த நகரில் தற்போது எங்கள் வீரர்கள் யாரும் இல்லை” என்றார்.

குர்து படைகள் தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறியதால் சிரியாவின் வடக்கு பகுதியில் முழுமையான சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சிரியாவின் வடக்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள தல் தமர் நகரில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் அங்கிருந்து வெளியேறினர்.

ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களில் அமெரிக்க வீரர்கள் சிரியாவில் இருந்து புறப்பட்டு அண்டை நாடான ஈராக்குக்கு சென்றனர்.

Comment here