இந்தியா

சுவிஸ் வங்கி: கருப்புப்பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல்

சுவிஸ் வங்கி: கருப்புப்பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல்

ஒவ்வொரு நாட்டினரின் வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை அந்தந்த நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்காக, தானாக தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் நிலைக்கு சுவிட்சர்லாந்து தள்ளப்பட்டது.

இந்தியா உள்பட 75 நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தத்தை அந்நாடு செய்து கொண்டுள்ளது. ஒப்பந்தப்படி, வங்கிக்கணக்கு தகவல்களை பகிர்ந்து வருகிறது. 7 ஆயிரத்து 500 வங்கிகள், அறக்கட்டளைகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து இந்த தகவல்களை சுவிட்சர்லாந்து திரட்டி உள்ளது.

இந்நிலையில், இந்தியர்களின் வங்கிக்கணக்கு தொடர்பான முதல்கட்ட தகவல் தொகுப்பை இந்தியாவுக்கு சுவிட்சர்லாந்து அளித்துள்ளது. இது, தற்போதைய கணக்கு விவரங்கள், கடந்த ஆண்டு முடித்துக்கொள்ளப்பட்ட வங்கிக்கணக்கு விவரங்கள் ஆகியவை அடங்கியதாகும்.

மேலும், சிலரது பெயர்களை குறிப்பிட்டு, அவர்களது வங்கிக்கணக்கு பற்றிய விவரங்களை இந்தியா கேட்டிருந்தது. அத்தகைய 100 கணக்குகளின் விவரங்களையும் சுவிஸ் வருமான வரித்துறை அளித்துள்ளது.

Comment here