கிரிக்கெட்விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம்

விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் வீரர்கள் செயல்பாட்டின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் (176 ரன், 127 ரன்) விளாசியதோடு 13 சிக்சர்கள் நொறுக்கி உலக சாதனை படைத்த இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா தரவரிசையில் கிடுகிடுவென ஏற்றம் கண்டுள்ளார். 36 இடங்கள் எகிறியுள்ள அவர் 17-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ வீரராக வலம் வருகிறார். விசாகப்பட்டினம் டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி சுழலில் வித்தை காட்டிய இந்திய வீரர்அஸ்வின் 4 இடங்கள் முன்னேறி மீண்டும் டாப்-10 இடத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

Comment here