தமிழ்நாடு

திருவையாறில் தியாகராஜர் 173-வது ஆராதனை விழா| வெங்கையா நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்

திருவையாறில் தியாகராஜர் 173-வது ஆராதனை விழா| வெங்கையா நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தியாகராஜரின் 173-வது ஆராதனை விழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. விழாவை துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.

தொடக்க விழாவுக்கு தியாக பிரம்ம மஹோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார். செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்று பேசுகிறார். மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கலந்துகொண்டு பேசுகிறார். முடிவில் சபை செயலாளர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் நன்றி கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து ரஞ்சனி காயத்ரி, கணேஷ், குமரேஷ், ஜெயந்தி குமரேஷ், மதுரை கிருஷ்ணா, ஓ.எஸ்.அருண், சிக்கல் குருசரன் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் 2-ம் நாள் காலை 9 மணிக்கு திருவையாறு இசைக்கல்லூரி மாணவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது.

Comment here