தமிழ்நாடு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, மூத்த தலைவர் இல.கணேசன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், மாநில துணைத்தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சுப நாகராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் மாநில வணிகப் பிரிவு தலைவர் ராஜாக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. முழு ஆதரவு தரும் என்று உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து வெளியே வந்த அமைச்சர் டி.ஜெயக்குமார், “நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டணி தொடரும்” என்றார்.

Comment here