அறுசுவை

நெஞ்செலும்பு குழம்பு செய்வது எப்படி ???

sendhamarainews.com

தேவையான பொருட்கள்:

  • எலும்பு   – 250 கி
  • முருங்கைக்காய் – 1
  • து.பருப்பு – 50 கி
  • வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1
  • இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
  • தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2
  • மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  • தனியா தூள் –  4 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
  • புளித் தண்ணீர் – 2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:

  • தேங்காய் – 2 மேசைக்கரண்டி
  • கசகசா  – 1 தேக்கரண்டி
  • மிளகு – 1 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி

தாளிக்க:

  • பிரியாணி இலை – 1
  • பட்டை – சிறிய துண்டு
  • கல் பாசி – சிறிது
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய்   – 2
  • கறிவேப்பிலை – 1  கொத்து
  • நல்லெண்ணெய்  – 2 மேசைக்கரண்டி

செய்முறை:

  1. எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து  3 விசில் விட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக வைக்கவும்.
  2. கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும்.
  3. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் , தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்க்கவும். பின்  மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து , முருங்கைக்காய், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வைக்கவும்.
  4. புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான, மணம் மிகுந்த எலும்பு சாம்பார் | நெஞ்செலும்பு குழம்பு சாப்பிட தயார்! வாழை இலையில், சூடான சாதத்தைப் போட்டு, இந்த சாம்பாரை ஊற்றி செட்டிநாடு கறி வறுவலுடன் சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே தெரியாது!

சாதத்தோடு மட்டுமில்லாமல்  இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா உடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

Comment here