கிரிக்கெட்விளையாட்டு

பகல்-இரவு டெஸ்ட் பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் – தெண்டுல்கர்

பகல்-இரவு டெஸ்ட் பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் - தெண்டுல்கர்

பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பனிப்பொழிவு பிரச்சினை இல்லாத வரைக்கும் பகல்- இரவு டெஸ்ட் கிரிக்கெட் நல்ல முயற்சி தான். ஆனால் பனிப்பொழிவின் தாக்கம் இருந்தால் அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் கடும் சவாலாக அமையும்.

ஏனெனில் பனியால் பந்து ஈரப்பதமாகும் போது, பந்து வீச்சாளர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் போட்டியின் போது பனிப்பொழிவு இல்லை என்றால், இது சிறப்பு வாய்ந்த போட்டியாக இருக்கும்.

Comment here