கல்வி

பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், உறுப்பு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் செமஸ்டர் தேர்வு நடந்தது.

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு நடந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

bdu.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண்ணை கொடுத்து, தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மறுமதிப்பீடு செய்வது போன்ற விபரங்களும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

Comment here