இந்தியா

பா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு

பா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு

கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தற்போது செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவை தலைவராக நியமிக்க அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின்கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிந்து மனு தாக்கல் செய்தனர்.

ஜே.பி.நட்டாவை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை. இதனால் ஜே.பி.நட்டா பா.ஜனதா கட்சியின் 14-வது தேசிய தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பை பா.ஜனதா தேர்தல் நடவடிக்கைக்கான பொறுப்பாளர் ராதாமோகன் சிங் வெளியிட்டார்.

Comment here