இந்தியா

பிரான்சில் தயாரான அதிநவீன ரபேல் போர் விமானம் – ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்

பிரான்சில் தயாரான அதிநவீன ரபேல் போர் விமானம் - ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்

36 விமானங்களில் முதல் விமானத்தை முறைப்படி பெறுவதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பிரான்சுக்கு 3 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

6-ந் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று முன்தினம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் போய்ச் சேர்ந்தார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரான்சில் இருப்பதில் மகிழ்ச்சி. இந்த பெரிய நாடு, இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு கூட்டாளி நாடு ஆகும். எங்கள் சிறப்பு உறவு, முறையான உறவுகளின் எல்லைக்கு அப்பாற்பட்டது.

எனது பிரான்ஸ் வருகை, இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதைய பாதுகாப்பு கூட்டு உறவை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது” என குறிப்பிட்டார்.

ராஜ்நாத் சிங், பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பாரீஸ் எலிசி அரண்மனையில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 35 நிமிடங்கள் நீடித்தது.

இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவினை மேலும் தீவிரப்படுத்துவதற்கும், ‘மேக் இன் இந்தியா’ என்னும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதற்கும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Comment here