சிந்தனை

மன அமைதியின்மைக்கு காரணங்கள்…

யோகம், தோஷம், லாபம், நஷ்டம், ஏற்றம், இறக்கம், இன்பம், துன்பம் உச்சம், நீச்சம், நேர் வழி, குறுக்கு வழி என நம் வாழ்க்கையில் எந்த விஷயத்தை எடுத்தாலும் இரண்டுமே இருக்கும். நிறை, குறைவு இல்லாதவர்களே கிடையாது. எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் ஒருவரின் வாழ்க்கை சக்கரம், சுழல்வது மாறுதலுக்குரியது. இந்த செயல்கள் கிரக சேர்க்கை மூலமும், தற்காலம் நடைபெறும் தசாபுக்தி மாற்றங்கள், கோச்சார கிரக பெயர்ச்சிகள் மூலம் நடைபெறுகிறது.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமானது யோகம், அதிர்ஷ்டம் ஆயுள், மன நலம். இந்த விஷயங்கள் சரியான விகிதாச்சாரத்தில் ஜாதக கட்டத்தில் நமக்கு அமைந்து இருந்தால். அவரவர் அமைப்பிற்கேற்ப. எல்லாம் கூடி வரும். பொதுவாக சமூகத்தில் ஒரு விஷயம் சொல்வார்கள் அதாவது எதற்கும் குடுப்பினை, அம்சம், பிராரப்தம், பாக்கியம் வேண்டும் என்று இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.

உதாரணமாக நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு கூட கிரக யோகம் வேண்டும். அந்த வகையில் ஒருவருக்கு மனநோய், பிதற்றல், நரம்புத்தளர்ச்சி, பயம், சோகம், விரக்தி,படபடப்பு, வெறி தற்கொலை செய்து கொள்வது, கொலை செய்வது, எதிர்மறை எண்ணங்கள், தோல்வி இயலாமை, அவமானம் என பல விஷயங்கள் ஒருவரை மன நோயாளி ஆக்குகிறது.

இந்த அமைப்பு ஜாதக அமைப்பின்படி கடைசி வரை மன நோயாளியாக, உணர்ச்சி வசப்பட்ட கொந்தளிப்பான எண்ணங்கள் உடையவராக புத்தி சுவாதினம் இல்லாதவராக செய்கிறது. அல்லது ஆவேசம், ஆத்திரம் காரணமாக கொலை, தற்கொலை செய்து கொள்ள வைக்கிறது.

மன அமைதியின்மைக்கு காரணங்கள்

மனம் என்பது ஒர்மாய சக்தி, மனோ சக்தி, வாயு வேகம், மனோ வேகம் என்று சொல்வார்கள், அதாவது காற்றைவிட மிக வேகமாக செல்லும் ஆற்றல் மிக்கது மனம். பகவான் ரமணர் மனத்தைப் பற்றி பல விஷயங்களை நமக்கு அருளியுள்ளார்கள். எண்ணங்களின் சேர்க்கை தான் மனம். மனம் ஒரு சேமிப்பு நிலையில்.

எண்ணங்கள் இல்லாமல் இருக்கும் போது நாம் அமைதியாக இருக்கிறோம். தூங்கும் போது மனம் என்ற ஒன்று செயல்படுவதில்லை.பொதுவாக பல்லோருக்கும் பிரச்னைகள், குழப்பங்கள், ஏமாற்றங்கள், தடைகள், நோய்கள் உண்டாகும் போது, எதையும் நினைத்து குழப்பம் அடையாதீர்கள் கலக்கம் அடையாதீர்கள் என்று புத்திமதி சொல்வார்கள். ஏன் ஆங்கில மருத்துவர்கள் கூட உங்களுக்கு உடல் ரீதியாக ஏதும் இல்லை, மன ரீதியாகத்தான் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்வார்கள்.

கடலின் அலைகள் சற்று ஒய்ந்தாலும் ஓயும், மனத்தின் எண்ண அலைகள். ஓயவே ஓயாது எப்போதும் அலை பாய்ந்து கொண்டிருக்கும். நிலையற்று பிடிவாதமாக அடங்காமல், இயல்பு அற்ற நிலையில் இருப்பதே மனதில் இயல்பாகும். சந்தேகமின்றி மனத்தை பக்குவப்படுத்த பக்தி, கர்ம, யோக, மார்க்கம் பயன்தரும். நம் உள்ளுக்குள் இருக்கும் ஆன்மாவை அறிவதே சிறந்த வழி.

எல்லாவற்றிலும் தொடர்ந்து தடைகள், தோல்விகள், குடும்பபிரச்னைகள், பொருளாதார பிரச்னைகள், வழக்குகள், கடன்கள், நோய்கள், மருத்துவ செலவுகள், உறவுகளால் பிரச்னை, சொத்து தகராறு, தனிமை, மனம் விரும்பும் உடல் ஒத்துழைக்காது, காதல் தோல்விகள், கள்ளத் தொடர்புகள், விவாகரத்து, வரதட்சணை கொடுமைகள். குடும்ப சிக்கல்கள் என்று மன அமைதியின்மை, பேதலிப்பு போன்றவற்றிற்கு இது போன்ற விஷயங்களே காரணமாகின்றன. இந்த விஷயங்களை எதிர்த்து சமாளிக்க முடியாமல் ஏதோ ஒரு உந்துதல் வேகத்தில், பல்வேறு நிர்பந்தம் காரணமாக தானே மரணத்தை உண்டாக்கி கொள்ளும் செயலே தற்கொலையாகும்.

தற்கொலை முயற்சிகள் எல்லாம் ஒரு வேகத்தில் செய்யப்படுவதாக சொல்லப்பட்டாலும். பலர் சரியாக திட்டமிட்டு ஏதாவது ஒரு வழியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகள் ஒரு காரணத்திற்காக செய்யப்படுவதாக தோன்றினாலும், உண்மை அது கிடையாது அதன் பின்னணியில் பல பிரச்னைகள் உளவியல் காரணங்களால் இருக்கின்றது. பிரச்னைகளை எதிர் கொள்ள முடியாத காரணம் இருந்தாலும்.

பரம்பரை, கர்மா, மரபணு சார்ந்த விஷயங்கள் தொடர்ந்து சில குடும்பங்களில் பரம்பரையாக அகால மரணம் ஏற்படும் என இருந்தாலும். இதற்கு முழு முதற் காரணமாக இருப்பது ஒருவரின் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக சேர்க்கைகள், பார்வைகள், அமைப்புக்கள், பிறந்த தேதி,. ராசி, நட்சத்திரம். அது சார்ந்த பல வீனமான, மோசமான கிரக சேர்க்கை உடைய தசாபுக்திகள்.

தான் இந்த துக்க கரமான சூழ்நிலையை உண்டாக்குகிறது.தற்கொலைக்கு காரண காரியங்கள் என்று பெரிதாக எதுவும் இருப்பதில்லை. திடசித்தம். மனதைரியம் இல்லாதது, அற்ப ஆயுள், கிரக தோஷ தசைகள் தான் காரணம். மிகப் பெரிய பிரச்னைகளுக்கும், அற்ப விஷயங்களுக்கும் தற்கொலை முடிவுகளை எடுக்கிறார்கள். இதில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு, பேதம் இல்லை. சமூகத்தில் மாணவர்கள் முதல் விவசாயிகள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் , பெரிய கல்வியாளர்கள். ஏன் மருத்துவர்கள் கூட தற்கொலை முடிவுகளை எடுக்கிறார்கள்.

லக்னம் – ராசி

ஜாதக கட்டத்தில் லக்கினமும், ராசியும் மிக முக்கியமானவை. பலவீனமான, நீச்ச கிரக சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை, லக்னாதிபதி நீசம், ராசியாதிபதி நீசம், 6,8,12 ஆம் அதிபதிகளுடன் சேர்க்கை பெற்று இருப்பது சந்திரன் நீசமாக இருப்பது போன்றவை எல்லாம் மனதைரியம் இழந்து கோழைகளாக விரக்தி, சோர்வு, சோகம், துக்கம் அடைந்து மன நோயாளிகளாக துவண்டு போவார்கள்.

இது ஓர் அடிப்படைக் காரணமாகும். ஆத்ம காரகனான சூரியன், மனோகாரகனான சந்திரன் பலம் குறைந்து நிழல் கிரகங்களான ராகு, கேது மற்றும் இருள் கிரகமான சனியுடன் சேர்க்கை . பார்வை சம்பந்தம் உள்ள ஜாதகங்கள் மன பேதலிப்பு, தற்கொலை முடிவுகள் வரும்.

சந்திரன், ராகு, கேது, முக்கூட்டுக் கிரக அமைப்பு கிரகண தோஷமாகும். மற்ற ஸ்தானங்கள் பலம் குறைவாக இருந்தால் பித்து பிடித்த நிலை உண்டாகும். நீசம், வக்கிரம், பலம் குறைந்த புதன் நரம்பு மண்டலங்களை செயல் இழக்கச் செய்து பலவீனமான மன நிலையை உண்டாக்கி தற்கொலைக்கு காரணமாக செயல்படுவார்.

செவ்வாயின் அமைப்பு காரணமாக கோபம், வெறி, சனி, தாக்கம் காரணமாக ஆயுள் பலம் குறைவு, இயலாமை, நபும்சகம், நரம்புத் தளர்ச்சி, பயம். கேதுவின் அம்சம் காரணமாக விரக்தி, என பல வகைகளில் பெரும்பாலான கிரகங்கள் சேர்ந்து ஒருவரை தற்கொலை முடிவு எடுக்க வைக்கிறது.

புதன்- ராகு சம்பந்தம் சரியாக இல்லை என்றால் விஷம் அருந்துதல், தூக்கமாத்திரைகள் மூலமும். ரயில் முன் பாய்வது போன்ற கோரமான முடிவுகள் ஏற்படும்.

புதன்- சந்திரன் சரியாக அமைய வில்லை என்றால் நிரந்தரமான நோயாளியாக இருப்பார். தனக்குத் தானே பேசிக் கொள்வார்கள். மிக அதீத நிலையில் தன் வசம் இழந்து கடல், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் விழுந்து முடிவைத் தேடிக் கொள்வார்கள்.

புதன் – சனி சேர்க்கை பார்வையால் பல பிரச்னைகள் வரும். ஆண், பெண். இல்லாத அலியாக பிறப்பவர்கள் மற்றும் ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு நபும்சகத்தன்மை, நரம்புத்தளர்ச்சி , உணர்ச்சியற்ற நிலை, நரம்பு மண்டல பாதிப்பு, உடல் உறவில் திருப்தி இல்லாத நிலை,மன உளைச்சல் என பல விதமான இயலாமைகள் உண்டாகும்.

அதனால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் சதை பிதற்றுவது காக்காய் வலிப்பு, பேசுவதையே பேசுவது என நடைபிணமாக வாழ்க்கை அமையும். இவர்கள் எங்கு, எப்படி எந்த வகையான முடிவுகள் எடுப்பார்கள் என்பது இவர்களுக்கே தெரியாது. படிப்பு அல்லது ஏதாவது ஒரு துறையில் மிகப் பெரிய அளவில் அறிவு ஜீவிகளாக இருப்பவர்களா. ஒருகால கட்டத்தில் மன நோயாளிகளாக மாறும் தன்மை உண்டு. இதற்கு மற்ற நீச்ச, கிரகங்களின் பார்வையும் காரணமாகும்.

பொதுவாக சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம். கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம், ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம்.

சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி. ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்ற கிரகங்களில் பலம் இல்லாமல் போனால் சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்பட்டு. தவறான எண்ணங்கள், கோழையான முடிவுகளை எடுப்பார்கள்.

பிறந்த தேதி எண், கூட்டு எண். 2,11,20,29,7,16,25,5,14,23, போன்ற தேதிகளுடன் 4,8 போன்ற எண்கள் சேரும் போது வாழ்க்கையில். சிறிய பிரச்னைகள், தோல்விகளை கூட தாங்க முடியாதவர்களாக யாரும் எதிர்பார்க்காத முடிவுகள் எடுப்பவர்களாக இருப்பார்கள்.முக்கியமாக லக்னாதிபதி, சந்திரன், சனி, புதன் போன்ற கிரகங்கள். நீச அம்சம் அல்லது நீச தொடர்பு ஏற்படும் போது விபரீதமான விஷயங்கள் நடந்து விடுகின்றது.

ஜாதக கட்டத்தில் 2,7,8 ஆம் அதிபதிகளின் தசா, புக்தி நடைபெறும்போது இதைப்போன்ற தற்கொலை, விபத்துக்கள் உண்டாகிறது 6,8,12 க்குரியவர்கள் சுப கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு தசா நடத்தும் போது தற்கொலை போன்ற கோரமான முடிவுகள் ஏற்படுகிறது.

லக்னம், ராசியில் நீச கிரகம் சம்பந்தப்பட்டு தசா நடத்தும் போதும் 7,8. ஆகிய வீடுகளில் இருந்து தசா நடத்தும் போது இதுபோன்ற தற்கொலை விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் இத்துடன் கோச்சார கிரக பெயர்ச்சி அதாவது கண்டசனி, சப்தம், அஷ்டம சனி. 7½ சனி போன்ற காலகட்டங்கள். ராசி, 2,7,8,10,4 போன்ற இடங்களில் ராகு , கேது பெயர்ச்சியாகி வரும். போது பல இக்கட்டான சூழ்நிலைகள் உண்டாகிறது.

Comment here