இந்தியா

மராட்டியம், அரியானாவில் அமைதியான வாக்குப்பதிவு

மராட்டியம், அரியானாவில் அமைதியான வாக்குப்பதிவு

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா மாநில சட்டசபைக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 8 கோடியே 98 லட்சத்து 39 ஆயிரத்து 600 வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 96 ஆயிரத்து 661 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்காக 3 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Comment here