இந்தியா

‘மாசில்லா இந்தியா’ இலக்கிற்காக மின்சார பேருந்துகள் அறிமுகம்

'மாசில்லா இந்தியா' இலக்கிற்காக மின்சார பேருந்துகள் அறிமுகம்

டெல்லியில் காற்று தர குறியீடு 500க்கும் மேல் உள்ளது.  இது மித அளவை விட 5 மடங்கு அதிகம்.  இதனால் மாசடைந்த காற்றானது வட இந்தியாவில் இருந்து கிழக்கு கடலோரம் வழியே வந்து தமிழகம் வரை தாக்கத்தினை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாசில்லா சூழலை ஏற்படுத்துவதற்காக அசாமில் மின்சார பேருந்துகளை பயன்படுத்துவது என அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் கவுகாத்தி நகரில் நேற்றிரவு 15 மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

Comment here