இந்தியா

மாணவர்கள் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் – பிரதமர் மோடி

மாணவர்கள் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் - பிரதமர் மோடி

மாணவர்கள் தேர்வு அறையில் எத்தகைய அழுத்தத்துடனும் நுழையக்கூடாது. அங்கு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது குறித்து கவலைப்பட வேண்டாம். உங்கள் மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் என்ன தயாரித்திருக்கிறீர்களோ அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

தேர்வுகளும், நல்ல மதிப்பெண்ணும்தான் அனைத்தும் என்ற எண்ணத்தில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். பொதுத்தேர்வு என்பது கல்விப்பயணத்தின் ஒரு பகுதி தான். தோல்வியை கண்டு அஞ்சக்கூடாது. அதை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வில் வெற்றி உறுதியில்லை என்பதால், அந்த நிகழ்ச்சியை பார்க்க செல்ல வேண்டாம் என எனக்கு சொல்லப்பட்டது. ஆனால் நான் அங்கு இருக்க வேண்டிய தேவை இருந்தது. தோல்வியில் இருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்.

Comment here