அழகு குறிப்புகள்

முடி சரசரன்னு வேகமா வளர டிப்ஸ் ???

sendhamarainews.com

அழகான நீளமான, அடர்த்தியான கூந்தலை உலகம் முழுவதும் உள்ள அத்து பெண்களுக்கு விரும்புவார்கள். அழகின் அடையாளமாக விளங்குவது நீளமான அடர்த்தியான தலை முடி என்பது மறுப்பதற்கில்லை.

நீளமான கூந்தல் இல்லாவிட்டாலும், அடர்த்தியான ஆரோக்கியமான தலைமுடிக்கும் ஒரு பக்கம் ஆதரவு உண்டு. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ஒருவரின் தலைமுடி அவரின் உடல் அழகை மேம்படுத்திக் காட்ட உதவுகிறது.

ஆரோக்கியமான கூந்தலை உடையவர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவராகவும் இருக்கிறார்கள். உங்களுக்கு ஏற்கனவே அடர்த்தியான அழகான கூந்தல் இருந்தாலும் அல்லது அதற்கான தேடலில் இருந்தாலும், உங்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு எது மிகவும் தேவை என்று உணர்ந்து கொள்வது அவசியம். இயற்கையான முறையில் உங்கள் கூந்தலை வேகமாக வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்ல ஒரு சில பொருட்கள் உதவுகின்றன. ஆகவே இந்த பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வதால், எளிய முறையில் உங்கள் கூந்தல் வளர்ச்சியை உங்களால் அதிகரிக்க முடியும் , அதுவும் இயற்கையான முறையில்..

கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய்கள் மிக முக்கிய காரணமாக உள்ளன. பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இன்றைய நாட்களில் மிகவும் குறைந்து விட்டது. நேரமின்மை மற்றும் ஸ்டைல் காரணமாக தலை முடிக்கு எண்ணெய் தடவுவதைப் பலரும் புறக்கணிக்கின்றனர். ஆனால், தலை முடிக்கு எண்ணெய் தடவுவதால் தலைமுடியின் வேர்க்கால்கள் வலிமை பெற்று முடி வளர்ச்சி தூண்டப் படுகிறது. குறிப்பாக சில எண்ணெய்களை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கிறது.

விரைவான கூந்தல் வளர்ச்சி, பேன் ஒழிப்பு , பொடுகு போக்குவது , முடி உதிர்வைக் குறைப்பது போன்றவற்றில் சில எண்ணெய்கள் நல்ல தீர்வைத் தருகின்றன.சில குறிப்பிட்ட எண்ணெய்களைக் கொண்டு தலை முடிக்கு மசாஜ் செய்வது, சில குறிப்பிட்ட எண்ணெய்களை கண்டிஷ்னரில் கலந்து தேய்ப்பது போன்ற முறைகள் நல்ல ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றன.

மக்கள் பொதுவாக பாதிக்கப்படும் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலம் முடி வளர்ச்சி சாத்தியமாகிறது.

Comment here