தமிழ்நாடு

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளையும், 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளின் வாக்குகளையும் மீண்டும் எண்ணுமாறு உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க எம்.எல்.ஏ. இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அவரது மேல்முறையீட்டு மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அருண் மிஸ்ரா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், “தபால் வாக்குகளை ஒரு ‘கெசட்டட்’ அதிகாரிதான் (அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி) அங்கீகரிக்க வேண்டும். ஆனால் இந்த 203 வாக்குகளில் தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்டுள்ளார்.

அவர் ‘கெசட்டட்’ அதிகாரி இல்லை என்பதால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தேவையே இல்லை என்பதால் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்து, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

விவாதத்துக்கு பின், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள். அதேசமயம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவை தற்போது அறிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

Comment here