இந்தியா

ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு எடியூரப்பா நன்றி

ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு எடியூரப்பா நன்றி

தென்மேற்கு பருவமழையால் நாட்டின் பல மாநிலங்களில் பெருத்த சேதம் விளைந்தது. இதைத்தொடர்ந்து மாநிலங்களில் நடந்து வரும் நிவாரண பணிகளை உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு செய்தார்.

இதில் கர்நாடகா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி கர்நாடகாவுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1200 கோடியும், பீகார் மாநிலத்துக்கு முன்கூட்டிய ஒதுக்கீடாக 2 தவணையில் ரூ.613.75 கோடி வழங்கவும் ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த நிலையில், வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா நன்றி தெரிவித்துள்ளார்.

Comment here