இந்தியா

வயநாடு – மைசூரு சாலையை திறக்கக்கோரி கேரள இளைஞர்கள் உண்ணாவிரதம்

வயநாடு-மைசூரு சாலையை திறக்கக்கோரி கேரள இளைஞர்கள் உண்ணாவிரதம்

இரவு நேரங்களில் இவ்வழியாக வாகனங்கள் செல்வதால் வனவிலங்குகள் அடிபட்டு இறப்பதாக கூறி கர்நாடக அரசு இரவில் இந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்தது.

இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பாதையில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதுதொடர்பாக கர்நாடக அரசுடன் கேரள அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இரவு நேரங்களில் இந்த பாதையை திறக்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

இந்த நிலையில் பகலிலும் இப்பாதையில் வாகனங்கள் செல்ல கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வயநாடு மாவட்டம் பத்தேரியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வயநாடு-மைசூரு சாலையை திறக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வயநாடு எம்.பி.யான ராகுல் காந்தி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

Comment here