தொழில்நுட்பம்

வைரலாகி வரும் பேஸ்ஆப் செயலி

வைரலாகி வரும் பேஸ்ஆப் செயலி

பேஸ்ஆப் எனும் செயலியை பயன்படுத்தி பலரும் தங்கள் முதுமையான தோற்றத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகமான பேஸ்ஆப் செயலியில் Old Age ஃபில்டர் என்ற வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் பல ஆண்டுகளுக்கு பிறகு, எப்படி இருப்பார் என்பதை புகைப்படத்தை எடிட் செய்து பார்க்க முடியும்.

இந்த வசதியை பயன்படுத்தி கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நடிகர்கள் உட்பட பலரும் தங்கள் புகைப்படத்தை எடிட் செய்து தங்களது முதுமையான தோற்றத்தை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதே போல இந்த செயலியை பயன்படுத்தி, ஒருவர் எதிர் பாலனித்தவராக இருந்தால் எப்படி இருப்பார், குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார் என பல விதமான தோற்றங்களை எளிமையான முறையில் எடிட் செய்து பார்க்க முடியும் என்பதால் இச்செயலி பலரையும் கவர்ந்துள்ளது.

Comment here