உலகம்

ஹாங்காங்கில் போராட்டக்குழு தலைவர் மீது தாக்குதல்

ஹாங்காங்கில் போராட்டக்குழு தலைவர் மீது தாக்குதல்

போராட்டக்குழுவின் தலைவர்களில் முக்கிய நபராக பார்க்கப்படும் இவர், நேற்று முன்தினம் மாலை ஹாங்காங் மோங் கோக் மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கைகளில் சுத்தியல்களுடன் வந்த 5 பேர் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர்.

இதில் அவரது மண்டை உடைத்து ரத்தம் கொட்டியது. இருப்பினும் அந்த கும்பல் சற்றும் ஈவுஇரக்கமின்றி அவரை மேலும் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து கிடந்த ஜிம்மி ஷாமை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சைக்கு பிறகு தான் நலமாக இருப்பதாகவும், இந்த தாக்குதல் தன்னை போராட்டக்காரர்களுடன் இன்னும் அதிகமாக இணைக்க உதவி இருப்பதாகவும் ஜிம்மி ஷாம் ‘பேஸ்புக்’கில் பதிவிட்டுள்ளார். மேலும், விரைவாக செயல்பட்டு தன்னை காப்பாற்றிய போலீசாருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Comment here